Blinking Feature Using CSS
MATHS HANDWRITTEN MATERIAL AVAILABE CONTACT: 8124821689
பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்.. மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மின்வாரியம் அழைப்பு
■பொதுமக்களின் வசதிக்காக, வீடுகளில் சூரியசக்தி மின் உற்பத்திக்கான மேற்கூரைகள் அமைக்கும் நிறுவனங்களை பதிவு செய்யுமாறு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.■மேற்கூரை அமைக்க விரும்புவோருக்கு இதுகுறித்த முக்கிய தகவலையும் வெளியிட்டிருக்கிறது. சூரிய ஒளி மின்சாரத்தை ஊக்குவிக்கும் பணிகளில் மத்திய அரசு நேரடியாக களம் இறங்கியிருக்கிறது.
■வீடுகளில் சூரிய மின்சக்தியை ஊக்குவிக்கும் வகையில் "பிரதமரின் சூரிய வீடு" என்ற பெயரில் இலவச மின்சார திட்டத்தை ரூ.75,000 கோடி முதலீட்டில் துவங்கப்பட்டுள்ளது. இலவச மின்சாரம்: இந்த திட்டத்தின்படி, வீடுகளில் கூரையில் சோலார் பேனல்களை பொருத்திக்கொள்ளும் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது..
■வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு மத்திய அரசும் மானியம் வழங்கி வருகிறது. அதன்படி, மத்திய அரசு சூரியசக்தி இலவச மின்திட்டத்தின் கீழ் வீடுகளில் ஒரு கிலோ வாட் திறனில் சூரியசக்தி மேற்கூரைகள் அமைக்க ரூ.30 ஆயிரமும், 2 கிலோவாட்டுக்கு ரூ.60 ஆயிரமும் மானியம் வழங்கப்படுகிறது.
■இதற்கு மேல் அமைக்கப்படும் ஒவ்வொரு கிலோவாட்டுக்கும் ரூ.18 ஆயிரம் மானியம் வழங்குகிறது.
மானியம்: இந்த மானியம் வழங்குவதையடுத்து, பல்வேறு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
பிரபஞ்ச அழகியானார் டென்மார்க்கின் தேல்விக்
■ஐரோப்பிய நாடான டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா கேர் தேல்விக், 2024ம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார்.
■வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள மெக்சிகோ சிட்டி நகர அரங்கில், 2024ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
■டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா கேர் தேல்விக், 21; நடப்பு ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார். இதன் வாயிலாக, பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற, முதல் டென்மார்க் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.
■கடந்த 2023ல், பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற நிகரகுவாவைச் சேர்ந்த அழகி ஷெய்னிஸ் பலாசியோஸ், விக்டோரியா கேர் தேல்விக்கிற்கு பிரபஞ்ச அழகி பட்டத்தை சூட்டினார்.
■இந்த போட்டியில், நைஜீரியா அழகி சிதிம்மா அடெட்ஷினா இரண்டாவது இடத்தையும், மெக்சிகோ அழகி மரியா பெர்னாண்டா பெல்ட்ரான் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
■மிஸ் யுனிவர்ஸ் இந்தியா - 2024 பட்டம் வென்ற 20 வயதான ரியா சிங்கா, பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் 30 இடங்களை பிடித்தார்.
No comments:
Post a Comment