https://drive.google.com/file/d/1JojJ0KCn-nSg1sGQ0P7kA8vmmstSmUPn/view?usp=drivesdk
Blog creator: pandiyammalperumal@gmail.com pandiyammal BE EEE FREE tnpsc exam center. group1,2,4,7,8 FREE online and offline classes available TNEB combined engineering service EEE FREE online TEST BATCH Questions prepared by P.Pandiyammal Contact: pandiyammalperumal@gmail.com
Thursday, May 16, 2024
Monday, May 13, 2024
2023-2012 previous year question papers
2023-2012 previous year group 4 question paper
https://drive.google.com/file/d/1IFDRmo2jpUG2cvYn7SrmJaZJTFF1aJ73/view?usp=drivesdk
2023-2012 previous year group 4 question paper
https://drive.google.com/file/d/1e6Fr2_eH3AovsNOugg_lIg7-L8ulkTEW/view?usp=drivesdk
Saturday, May 11, 2024
Jan month current affairs 2024
Jan month current affairs 2024 date wise
https://drive.google.com/file/d/1DmfWBVVXtUfCRRZuLvhcXLRL5AM432bh/view?usp=drivesdk
9-10 Tamil test part -1
தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் முதலிய மொழிகளை ஆராய்ந்து அதற்க்கு தென்னிந்திய மொழிகள் என பெயரிட்டவர் யார் ?
அ)ஹோக்கன் ஆ)வில்லியம் ஜோன்ஸ்
இ)பிரான்சிஸ் எல்லீஸ் ஈ)மாக்ஸ் முல்லர்
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை கார்டுவெல் வெளியிட்ட ஆண்டு ?
அ)1816 ஆ)1850 இ)1856 ஈ)1836
பர்ஜி எந்த மொழிக் குடும்பத்தை சார்ந்தது ?
அ)தென்திராவிடம் ஆ)நடுத்திராவிடம் இ)வடதிராவிடம் ஈ)இவற்றில் ஏதுமில்லை
தமிழில் மூன்று என அழைக்கப்படும் தமிழ் எண்ணுப்பெயர் கன்னடத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
அ)மூணு ஆ)மூரு இ)மூடு ஈ)மூஜி
நீ என்னும் திராவிடமொழி சொல் கன்னடத்தில் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது ?
அ)நீன் ஆ)ஈ இ)நின் ஈ)நீவு
வணக்கம் வள்ளுவம் என்னும் கவிதை நூலுக்கு சாகத்திய அகதெமி விருது எப்போது வழங்கப்பட்டது ?
அ)2003 ஆ)2004 இ)2005 ஈ)2006
தமிழ்விடு தூது என்னும் நூலின் ஆசிரியர் ?
அ)ஈரோடு தமிழன்பன் ஆ)சச்சிதானந்தம்
இ)பாரதியார் ஈ)ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
ஒரு மா என்பதற்கான எண் அளவு ?
அ)1/8 ஆ)1/16 இ)1/20 ஈ)1/32
கிரேக்கத்தில் வெண்பா வடிவப் பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
அ)இளிவரல் ஆ)இளிகியா இ)பாய்யியோனா ஈ)சாப்போ
கால் முளைத்த கதைகள் என்னும் நூலை எழுதியவர் யார் ?
அ)எஸ்.ரவிகிருஷ்ணன் ஆ)எஸ்.ராமகிருஷ்ணன்
இ)எஸ்.கிருஷ்ண குமார் ஈ)எஸ்.ராமமூர்த்தி
உலக சுற்றுசூழல் தினம் ?
அ)ஜூலை 5 ஆ)ஜூன் 5 இ)ஆகஸ்ட் 5 ஈ)மார்ச் 5
தொவ்லீஸ்வரம் அணை எந்த ஆற்றின் குறுக்கே எப்போது கட்டப்பட்டது ?
அ)காவிரி,1783 ஆ)காவிரி,1873 இ)கோதாவரி,1783 ஈ)கோதாவரி,1873
உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை ?
அ)உறைக்கிணறு ஆ)கூவல் இ)புனற்குளம் ஈ)இலஞ்சி
மிசை என்பதற்கான பொருள்
அ)கீழ் ஆ)மேல் இ)விருப்பம் ஈ)தரும்
குருவிப்பட்டி என்னும் நூலை எழுதியவர் யார் ?
அ)ஈரோடு தமிழன்பன் ஆ)பாரதியார் இ)பாரதிதாசன் ஈ)தமிழ் ஒளி
சுரிவளை பொருள் தருக :
அ)தேன் ஆ)சங்கு இ)நெருங்குகின்ற சங்குகள் ஈ)வட்டம்
ஒவ்வொரு பாடலிலும் அடியார்களின் சிறப்பைக் கூறுவதாக அமைந்த நூல் எது ?
அ)திருத்தொண்டர் திருவந்தாதி ஆ)பெரிய புராணம்
இ)திருத்தொண்டர் தொகை இ)திருத்தொண்டர் புராணம்
உண்பது நாழி உடுப்பது இரண்டே என்று கூறும் புறநானூற்றுப்பாடலை பாடியவர் ?
அ)கபிலர் ஆ)கம்பர் இ)நக்கீரர் ஈ)குடபுலவியனார்
தண்ணீர் என்னும் நூலை எழுதியவர் ?
அ)கோமல் சுவாமிநாதன் ஆ)ராமலிங்கம் இ)கந்தர்வன் ஈ)ஆ(ம)இ
எந்த மொழிகளில் துணைவினைகள் முதல் வினைகளுக்கு பின்பு இடம் பெறும்?
அ)தமிழ் ஆ)ஆங்கிலம் இ)பிரான்சு ஈ)அ(ம)இ
நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது ?
அ)அகழி ஆ)ஆறு இ)இலஞ்சி ஈ)புலரி
மழைக்காலமும் குயிலோசையும் என்னும் நூலை எழுதியவர் ?
அ)வெ.இறையன்பு ஆ)மா.கிருஷ்ணன் இ)யுமா வாசுகி ஈ)கவிமணி
ஒரு கிலோ சர்க்கரையை உற்பத்தி செய்ய எவ்வளவு லிட்டர் தண்ணீர் தேவை ?
அ)822 ஆ)2500 இ)1780 ஈ)18,900
மூன்று எருதுகளை பலர் கூடி விரட்டுவது போன்ற ஓவியம் எங்கு காணப்படுகிறது ?
அ)கரிக்கையூர் ஆ)கல்லூத்து மேட்டுப்பட்டி இ)சித்திரக்கல் புடவு ஈ)உசிலம்பட்டி
சிந்துவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட கல் முத்திரை தமிழர்களின் ஏறுதழுவுதளைக் குறிப்பதாக கூறியவர் ?
அ)ஐராவதம் மகாதேவன் ஆ)ஐராவதம் சகாதேவன்
இ)மாணிக்கம் ஈ)இவரில் யாருமில்லை
வேதிகை பொருள் தருக ?
அ)தூண் ஆ)மாலை இ)திண்ணை ஈ)மன்றம்
எண்பேராயம் குழுவில் தவறான நபரை கண்டுபிடி ?
அ)கரணத்தியலவர் ஆ)சடங்கு செய்விப்பவர் இ)நகரமாந்தர் ஈ)யானை மறவர்
தாழ்பூந்துறை என்னும் சொல்லுக்கு இலக்கணக் குறிப்பு தருக ?
அ)பெயரெச்சம் ஆ)வினையெச்சம் இ)பண்புத்தொகை ஈ)வினைத்தொகை
பெண்மையை முதன்மைப்படுத்தும் காப்பியம் ?
அ)புரட்சிகாப்பியம் ஆ)மணிமேகலை இ)சீவகசிந்தாமணி ஈ)அ(ம)ஆ
சிவப்பு-கருப்பு பானைகள் எங்கு கிடைக்கப்பெற்றன ?
அ)கொடுமணல் ஆ)கீழடி இ)பல்லாவரம் ஈ)பொருந்தல்
ரோமானிய பழங்காசுகள் கிடைக்கப்பெற்ற இடம் ?
அ)சென்னை ஆ)அரிக்கமேடு இ)கோவை ஈ)பல்லாவரம்
முதுமக்கள் தாழிகள் எந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன?
அ)அரிக்கமேடு ஆ)ஆதிச்சநல்லூர் இ)சென்னை ஈ)பொருந்தல்
பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம் என்று கூறும் நூல் எது ?
அ)மணிமேகலை ஆ)சிலப்பதிகாரம் இ)கம்பராமாயணம் ஈ)திருவாசகம்
வல்லினம் மிகுந்து வரும் புணர்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
அ)திரிதல் ஆ)கெடுதல் இ)தோன்றல் ஈ)புணர்தல்
விகாரப்புணர்ச்சி எத்தனை வகைப்படும் ?
அ)6 ஆ)4 இ)7 ஈ)3
பொருந்தாததை கண்டுபிடி :
அ)ஓரெழுத்து ஒருமொழிக்கு பின் வல்லினம் மிகும்
ஆ) இனி,தனி ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகும்
இ)மிக என்னும் சொல்லின் பின் வல்லினம் மிகும்
ஈ)வன்தொடர்க் குற்றியலுகரங்கள் வரும் மொழியாக இருந்து புணர்கையில் வல்லினம் மிகும்
தமிழக வரலாறும்,தமிழர் பண்பாடும் என்னும் நூலை எழுதியவர் ?
அ)என்.சொக்கன் ஆ)கா.ராஜன் இ)தட்சிணமூர்த்தி ஈ)ராசமணிக்கனார்
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் என்னும் குறள் எந்த அணி ?
அ)சொற்பொருள் பின்வருநிலையணி ஆ)ஏகதேச உருவகஅணி
இ)உவமையணி ஈ)வஞ்சிபுகழ்ச்சி அணி
கந்தகம் தடவிய துத்தநாகத் தட்டைக்கொண்டு,1938 இல் உலகின் முதல் ஒளிப்படியை எடுத்தவர் ?
அ)அலேக்சாண்டர் பெயின் ஆ)ஜியோவன்னி காஷில்லி
இ)செஸ்டர் கார்ல்சன் ஈ)ஹான்க் மானஷ்கி
ஆட்ரியன் ஆஷ்பீல்டு என்பவர் எந்த ஆண்டு கடவுச் சொல்லுடன் கூடிய அட்டைக்கு இங்கிலாந்தில் காப்புரிமை பெற்றார் ?
அ)1927 ஆ)1972 இ)1962 ஈ)1935
பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இணையம் வந்த ஆண்டு ?
அ)1882 ஆ)1919 இ)1991 ஈ)1982
2015ஏப்ரல் 1 அன்று ஒரே நாளில் எத்தனை பயணச்சீட்டுகள் பதிவுசெய்யப்பட்டது ?
அ)29 ஆ)1500 இ)13லட்சம் ஈ)3 லட்சம்
சரியானதை தேர்ந்தெடு ?
அ)இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதினை பெற்றார்
ஆ)கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் புதினத்துக்காக 2004ம் ஆண்டு சாகத்திய அகதெமி விருதினை பெற்றார்
இ)தேசிய விருதினை 6,மாநில விருதினை 7 முறையும் வாங்கியுள்ளார்
ஈ)இவருடைய கவிதை பிரஞ்சு,சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
மூன்று அறிவு என்று தொல்காப்பியர் எதனை குறிப்பிடுகிறார் ?
அ)நண்டு,தும்பி ஆ)சிப்பி,நத்தை இ)கரையான்,எறும்பு ஈ)பறவைவிலங்கு
தமிழரின் அகம்,புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும் தமிழ் இலக்கிய கோட்பாடுகளையும் விளக்கும் நூல் ?
அ)திருக்குறள் ஆ)தொல்காப்பியம் இ)புறநானூறு ஈ)நற்றிணை
ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர் ?
அ)சிவன் ஆ)அருணன்சுப்பையா இ)வளர்மதி ஈ)மயில்சாமி அண்ணாதுரை
இந்தியாவின் செவ்வாய் சுற்றுக்கலன் திட்டத்தின் திட்ட இயக்குநர்
அ)சிவன் ஆ)அருணன்சுப்பையா இ)வளர்மதி ஈ)மயில்சாமி அண்ணாதுரை
கையருகே நிலா என்னும் நூலை எழுதியவர்
அ)சிவன் ஆ)அருணன்சுப்பையா இ)வளர்மதி ஈ)மயில்சாமி அண்ணாதுரை
சரியானதை தேர்ந்தெடு :
அ)வரும்படி சொன்னார் என்பதை அடுத்து வல்லினம் மிகும்
ஆ)திருவளர்செல்வன் என்பதில் வல்லினம் மிகும்
இ)குதிரை தாண்டியது என்னும் சொல்லை அடுத்து வல்லினம் மிகும்
ஈ)நாடு கண்டான் என்னும் சொல்லை அடுத்து வல்லினம் மிகாது
பெண்மை என்றால் புரட்சி என்பதற்கு எடுத்துக்காட்டு ?
அ)மூவலூர் ராமாமிர்தம் ஆ)ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்
இ)முத்துலெட்சுமி ஈ)பண்டித ராமாபாய்
தேவதாசி ஒழுப்பு சட்டத்துக்கு துணை நின்றவர் ?
அ)மூவலூர் ராமாமிர்தம் ஆ)ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்
இ)முத்துலெட்சுமி ஈ)பண்டித ராமாபாய்
கோத்தாரி கல்விக் குழு எந்த ஆண்டு ?
அ)1929 ஆ)1964 இ)1946 ஈ)1943
குழந்தை திருமணத்தை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்டது ?
அ)கோத்தாரி குழு ஆ)சாரதா சட்டம்
இ)பெண்கல்விஊக்குவிப்புசட்டம் ஈ)ஹண்டர் குழு
மறைமலை அடிகளின் மகள் யார் ?
அ)ராஜேஸ்வரி அம்மையார் ஆ)நாகம்மையார்
இ)நீலாம்பிகை அம்மையார் ஈ)சிவகாமி அம்மையார்
நவிலல் பொருள் தருக ?
அ)தரும் ஆ)மகிழ்ச்சி இ)வழங்குதல் ஈ)சொல்லல்
அணித்து பொருள் தருக ?
அ)அணிவித்து ஆ)அழைத்தல் இ)நெருங்கி ஈ)அருகில்
வில்வாள் இலக்கணக் குறிப்பு தருக ?
அ)உவமை தொகை ஆ)உம்மைத்தொகை இ)உருவகம் ஈ)உவமேயம்
குடும்ப விளக்கு என்னும் நூல் எத்தனை பகுப்புகளைக் கொண்டது ?
அ)3 ஆ)2 இ)5 ஈ)4
பட்டங்கள் ஆழ்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் ?
அ)கவிமணி ஆ)பாரதிதாசன் இ)பெரியார் ஈ)பாரதி
பாரதியார் எத்தனை வயதில் அரசவையில் கவிதை எழுதி “பாரதி” என்னும் பட்டம் பெற்றார் ?
அ)12 ஆ)11 இ)13 ஈ)15
மதுரைக் காஞ்சியில் மதுரையை பற்றி மற்றும் சிறப்பித்து கூறும் அடிகள் எத்தனை ?
அ)352 ஆ)345 இ)354 ஈ)435
மாங்குடி மருதனார் எட்டுத்தொகை நூல்களில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார் ?
அ)15 ஆ)10 இ)13 ஈ)21
மரிக்கொழுந்து நட்டான் என்ன ஆகுபெயர் ?
அ)காலவாகு பெயர் ஆ)தொழிலாகு பெயர்
இ)சினையாகுபெயர் ஈ)பண்பாகு பெயர்
அன்றாட வாழ்வில் அறிவியல் என்னும் நூலை எழுதியவர் ?
அ)ஜகந்நாதன் ஆ)தமிழ்ச்செல்வன் இ)ஜானகிராமன் ஈ)நாகலிங்கம்
சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ?
அ)1924 ஆ)1925 இ)1926 ஈ)1927
கமுகு என்பதற்குரிய இலைப் பெயர் என்ன ?
அ)பாக்கு ஆ)தாள் இ)கூந்தல் ஈ)வெற்றிலை
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் நூலை எழுதியவர் ?
அ)ந.பிச்சமூர்த்தி ஆ)இராமலிங்கனார் இ)ரா.பி.சேதுபிள்ளை ஈ)வல்லிக்கண்ணன்
எந்த ஆண்டு பிச்சமூர்த்தி கலைமகள் இதழ் வழங்கிய பரிசைப் பெற்றார் ?
அ)1930 ஆ)1931 இ)1932 ஈ)1934
எந்த ஒன்று உருவாக வேண்டுமென்றால் உண்டும் வேண்டும்;இல்லையும் வேண்டும் எனக் கூறுபவர் யார் ?
அ)ந.பிச்சமூர்த்தி ஆ)தாவோஜெயிங் இ)லா வோட்ஷு ஈ)கான்பூசியஸ்
வெகுளி பொருள் தருக :
அ)அச்சம் ஆ)கோபம் இ)சினம் ஈ)வியப்பு
ஜாம்ஷீத் என்பது எந்த மொழி புராணம் ?
அ)கிரேக்கம் ஆ)லத்தீன் இ)ஹீப்ரு ஈ)பாரஷிகம்
அசை கலைச்சொல் தருக ?
அ)Rhyme ஆ)Syllable இ)font ஈ)Reforming The Letters
யார் நிலத்தை பிரித்த முறை உலகின் பிரிவாக அமைந்தது ?
அ)தொல்காப்பியர் ஆ)திருவள்ளுவர் இ)கபிலர் ஈ)முடியரசன்
எல்லாருடைய நாடுகளும் நமக்கு தாய் நாடு என்றும் நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நம் கருதுதல் வேண்டும் என்று கூறியவர் யார் ?
அ)மார்க்ஸ்அரேலியஸ் ஆ)ஸ்டாயிக்வாதிகள் இ)செனக்கா ஈ)ஜி.யு.போப்
வண்ணதாசனுக்கு சாகத்திய அகதெமி விருது பெற்று தந்த நூல் ?
அ)ஒரு சிறு இசை ஆ)முன்பின் இ)அந்நியமற்ற நதி ஈ)உயரப்பறத்தல்
கல்மரம் என்னும் நூலை எழுதியவர் யார் ?
அ)பாவண்ணன் ஆ)ந.முருகேசபாண்டியன் இ)திலகவதி ஈ)எம்.எஸ்.உதயமூர்த்தி
தெவ் என்பதன் பொருள் என்ன ?
அ)சிவந்தன ஆ)வில் இ)மேல் ஈ)பகைமை
ஆலங்கனம் என்னும் ஊர் பற்றி கூறும் நூல் எது ?
அ)ஐங்குறுநூறு ஆ)பதிற்றுப்பத்து இ)மதுரைக்காஞ்சி ஈ)குறுந்தொகை
இஸ்மத் சன்னியாசி என்பது எம்மொழி சொல் ?
அ)கிரேக்கம் ஆ)லத்தீன் இ)ஹீப்ரு ஈ)பாரஷிகம்
செய்முறை என்பதன் இலக்கணக் குறிப்பு தருக ?
அ)வேற்றுமைத்தொகை ஆ)வினைத்தொகை இ)வினையெச்சம் ஈ)பெயரெச்சம்
பிணித்து பொருள் தருக ?
அ)படுக்கை ஆ)யாக்கை இ)கட்டி ஈ)அசைந்து
கணையாழி என்னும் இதழை தொடங்கியவர் யார் ?
அ)மா.பொ.சி ஆ)முகமது ரஃபி இ)முத்தையா ஈ)வேணுகோபாலன்
கருத்தாழமும் வாசகச் சுவைப்பும் கலந்து இலக்கியங்களை படைத்தவர் ?
அ)மா.பொ.சி ஆ)ஜெயகாந்தன் இ)கண்ணதாசன் ஈ)நாகூர்ரூமி
இருவர் உரையாடுவது போன்ற ஓசை ?
அ)செப்பலோசை ஆ)அகவலோசை இ)துள்ளலோசை ஈ)தூங்கலோசை
ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது ?
அ)சண்பகம் ஆ)குறிஞ்சி இ)பிரம்மகமலம் ஈ)மூங்கில்
முத்தையா எப்போது திரைப்படப்பாடலாசிரியர் ஆனார் ?
அ)1945 ஆ)1994 இ)1949 ஈ)1954
மீட்சி விண்ணப்பம் என்னும் கவிதை தொகுப்பு யாருடையாது ?
அ)நாகூர் ரூமி ஆ)வேணுகோபாலன் இ)ராஜகோபாலன் ஈ)கண்ணதாசன்
தம்மை விட குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை கூறியவர் ?
அ)மாங்குடி மருதனார் ஆ)ஆவூர் மூலங்கிழார்
இ)முடமோசியார் ஈ)ஊன்பொதிபசுங்குடையார்
அறம் அறக் கண்ட நெறிமான் அவையம் என்று கூறும் நூல் எது ?
அ)நற்றிணை ஆ)அகநானூறு இ)புறநானூறு ஈ)குறுந்தொகை
மங்கிய வெண்ணிற நறுமணம் கொண்ட கொத்துக் கொத்தாக மலரும் பூ வகை எது ?
அ)தும்பை ஆ)வஞ்சி இ)உழிஞ்சை ஈ)வாகை
புறத்திணைகள் எத்தனை வகைப்படும் ?
அ)10 ஆ)7 இ)12 ஈ)5
தமிழக அரசின் ஒவ்வையார் விருது வாங்கியவர் யார் ?
அ)கிருஷ்ணம்மாள் ஜெயகாந்தன் ஆ)சின்னம்பிள்ளை
இ௦)ராஜாம் கிருஷ்ணன் இ)எம்.எஸ் சுப்புலக்ஷி
சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு ?
அ)காண்டம் ஆ)படலம் இ)காதை ஈ)பிரிவு
கணவனை இழந்த கண்ணகி மதுரையில் இருந்து சென்று எந்த இடத்தை அடைந்தார் ?
அ)சிறுமலை ஆ)நெடுவேல் குன்றம் இ)திருமால் குன்றம் ஈ)வேங்கைக் கானல்
பயில்தொழில் இலக்கணக் குறிப்பு தருக ?
அ)வினையெச்சம் ஆ)வினைத்தொகை இ)பண்புத்தொகை ஈ)பெயரெச்சம்
அகலிகை ஆத்மசிந்தனை என்னும் நூலை எழுதியவர் யார் ?
அ)நாகூர் ரூமி ஆ)வேணுகோபாலன் இ)ராஜகோபாலன் ஈ)கண்ணதாசன்
தமிழ்த்திரு என அழைக்கப்பட்டவர் யார் ?
அ)குன்றக்குடி அடிகளார் ஆ)இளங்குமரனார் இ)கால்டுவெல் ஈ)திருவள்ளுவர்குளு குளுத்த பழம் ?
அ)அழுகல் ஆ)சிவியல் இ)அளியல் ஈ)வெம்பல்
தமிழ்ச்சொல் வளம் எந்த நூலில் இருந்து பெறப்பட்டது ?
அ)சொல்லாய்வு கட்டுரை ஆ)சொல்லாராய்ச்சி கட்டுரை
இ)ஆய்வுக்கட்டுரை ஈ)இவற்றில் ஏதுமில்லை
தேவநேயப்பாவாணரின் சிறப்புபெயர் என்ன ?
அ)கலைஞாயிறு ஆ) மொழிஞாயிறு இ)பாவலரேறு ஈ) கவிஞாயிறு
TNPSC TELEGRAM LINK
Join TELEGRAM CLICK HERE