Sunday, November 17, 2024

Daily Current Affairs


Today current affairs 18.11.2024

Blinking Feature Using CSS

பிரதம‌ மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்.. மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மின்வாரியம் அழைப்பு

பொதுமக்களின் வசதிக்காக, வீடுகளில் சூரியசக்தி மின் உற்பத்திக்கான மேற்கூரைகள் அமைக்கும் நிறுவனங்களை பதிவு செய்யுமாறு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

மேற்கூரை அமைக்க விரும்புவோருக்கு இதுகுறித்த முக்கிய தகவலையும் வெளியிட்டிருக்கிறது. சூரிய ஒளி மின்சாரத்தை ஊக்குவிக்கும் பணிகளில் மத்திய அரசு நேரடியாக களம் இறங்கியிருக்கிறது.

வீடுகளில் சூரிய மின்சக்தியை ஊக்குவிக்கும் வகையில் "பிரதமரின் சூரிய வீடு" என்ற பெயரில் இலவச மின்சார திட்டத்தை ரூ.75,000 கோடி முதலீட்டில் துவங்கப்பட்டுள்ளது. இலவச மின்சாரம்: இந்த திட்டத்தின்படி, வீடுகளில் கூரையில் சோலார் பேனல்களை பொருத்திக்கொள்ளும் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது..

வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு மத்திய அரசும் மானியம் வழங்கி வருகிறது. அதன்படி, மத்திய அரசு சூரியசக்தி இலவச மின்திட்டத்தின் கீழ் வீடுகளில் ஒரு கிலோ வாட் திறனில் சூரியசக்தி மேற்கூரைகள் அமைக்க ரூ.30 ஆயிரமும், 2 கிலோவாட்டுக்கு ரூ.60 ஆயிரமும் மானியம் வழங்கப்படுகிறது.

இதற்கு மேல் அமைக்கப்படும் ஒவ்வொரு கிலோவாட்டுக்கும் ரூ.18 ஆயிரம் மானியம் வழங்குகிறது.

மானியம்: இந்த மானியம் வழங்குவதையடுத்து, பல்வேறு வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

பிரபஞ்ச அழகியானார் டென்மார்க்கின் தேல்விக் 

ஐரோப்பிய நாடான டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா கேர் தேல்விக், 2024ம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார்.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள மெக்சிகோ சிட்டி நகர அரங்கில், 2024ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா கேர் தேல்விக், 21; நடப்பு ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார். இதன் வாயிலாக, பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற, முதல் டென்மார்க் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.

கடந்த 2023ல், பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற நிகரகுவாவைச் சேர்ந்த அழகி ஷெய்னிஸ் பலாசியோஸ், விக்டோரியா கேர் தேல்விக்கிற்கு பிரபஞ்ச அழகி பட்டத்தை சூட்டினார்.

இந்த போட்டியில், நைஜீரியா அழகி சிதிம்மா அடெட்ஷினா இரண்டாவது இடத்தையும், மெக்சிகோ அழகி மரியா பெர்னாண்டா பெல்ட்ரான் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா - 2024 பட்டம் வென்ற 20 வயதான ரியா சிங்கா, பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் 30 இடங்களை பிடித்தார்.

No comments:

Post a Comment

TNPSC TELEGRAM LINK

  Join TELEGRAM CLICK HERE