பிப்ரவரி 16 2023
தேசிய உற்பத்தி திறன் தினம் பிப்ரவரி 12 விளக்கம்
- தேசிய உற்பத்தி திறன் சபையின் என் பி சி ஸ்தாபன நாளை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12ஆம் தேதி அன்று இந்தியாவின் உற்பத்தி திறன் தினமானது கொண்டாடப்படுகிறது
- நாட்டின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வை ஊக்குவிப்பதே தேசிய உற்பத்தி திறன் சபையின் குறிக்கோளாகும்
- பிப்ரவரி 12 முதல் 18 வரை அனுசரிக்கப்படுகின்ற தேசிய உற்பத்தி திறன் வாரத்தின் ஒரு பகுதியாக இந்நாள் கொண்டாடப்படுகிறது
- இந்த ஆண்டிற்கான தேசிய உற்பத்தி திறன் தினத்தின் கருத்துரும் இலக்குகளை நிர்வகிப்பதற்கான ஒரு வாய்ப்பு என்பதாகும்
- உற்பத்தி தீரன் சபை என்பது வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் 1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும்
விளையாட்டு செய்தி
- புதுடெல்லியின் நடைபெற்ற இந்திய ஓபன் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றைய பிரிவு கொரிய வீராங்கனை அன் சோயோங் வெற்றி பெற்றார்
- அவர் இறுதிப் போட்டியில் உலகம் முன்னணி ஜப்பானிய வீராங்கனியான அகானா யமா குச்சி தோற்கடித்தார்
- ஆக்செல்சன் இதற்கு முன்பு 2017 மற்றும் 19 ஆகிய ஆண்டுகளில் இந்திய ஓபன் பட்டத்தினை வென்றுள்ளார்
- 2023 ஆம் ஆண்டு இந்திய ஓபன் ஆடவர் ஒற்றை பிரிவு பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் குன் லவுட் விடி சார்ன் பட்டத்தை வென்றார்
Tropex -23
- இந்திய கடற்படையின் முக்கிய கடல்சார் பயிற்சியான Tropex 23 2023ஆண்டின் பயிற்சியானது தற்போது இந்திய பெருங்கடல் பகுதியில் நடைபெற்று வருகிறது
- இந்த நடவடிக்கை அளவிலான பயிற்சியானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவதோடு அனைத்து கடற்படைகள் இந்திய ராணுவம் இந்திய விமானப்படை மற்றும் கடலோர காவல் படை சார் கப்பல்கள் ஆகியவை இதில் பங்கேற்கின்றன
- பயிற்சியானது ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை மூன்று மாத காலங்களுக்கு நடத்தப்படுகிறது
அறிவியல் துறையின் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் பிப்ரவரி 11
- இது அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் பெண்களின் முழு அளவிலான மற்றும் சமமான அடுகள் மற்றும் பங்களிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
- எட்டாவது அறிவியல் துறையில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினமாகும்
- 2023 ஆம் ஆண்டிற்கான இந்த தினத்திற்கான புதுமை செயல் விளக்கம் உயர்வு மேம்பாடு idea. : நிலையான மற்றும் சமமான மேம்பாட்டிற்காக என்று சமூகங்களை முன்னோக்கி கொண்டு வருதல் என்பதாகும்
சர்வதேச சார்லஸ் டார்வின் தினம் பிப்ரவரி 12
- சார்லஸ் டார்வின் ஒரு ஆங்கிலேய இயற்கை ஆர்வலர் ஆவார்
- இவருடைய இயற்கை தேர்வு மூலமாக பரிணாம வளர்ச்சி பற்றிய அறிவியல் கோட்பாடா ஆனது நவீன பரிணாம ஆய்வுகளின் அடித்தளத்தை உருவாக்கியது
- 1859 ஆம் ஆண்டு நவம்பர் 24 தேதி அன்று இயற்கை தேர்வின் வழியாக உயிரினங்களின் தோற்றம் என்ற தனது கோட்பாட்டினை வெளியிட்டார்
அறிவியல் செய்தி
குவவார் குறுங்கோவினை சுற்றி காணப்படும் வளையம்
சனிக்கோளினை சுற்றியுள்ள வளையம் போன்ற குவாவார் சுற்றி வளையம் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
செயலி
கானன் பிரகாரி செயலி
- இந்திய அரசானது கானன் பிரஹாரி எனப்படும் கைபேசி செயலி மற்றும் cmsms இணையதளம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது
- Cmsms என்பது நிலக்கரி சுரங்க கண்காணிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு என்பதன் சுருக்கமாகும்
- இது அங்கீகரிக்கப்படாத நிலக்கரி சுரங்க நடவடிக்கை பற்றி புகார் அளிக்க செய்வதற்கான வசதியினை வழங்குகிறது
- ஆந்திர பிரதேசம் தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சிறு கனிமங்களுக்கான சட்ட விரோதமான சுரங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது பெரும்பாலும் அதிகமாக காணப்படுகிறது
- அசாம் மற்றும் மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் நிலக்கரி போன்ற முக்கிய கனிமங்களுக்கான சட்டவிரோதமான சுரங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது பெரும்பாலும் அதிகமாக காணப்படுகிறது
- சட்டவிரோதமான மணல் கடத்தலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது
மாநில அரசுகளின் கல்விக்கான நிதி ஒதுக்கீடு
- இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் சத்தீஸ்கர் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் 2023 ஆம் ஆண்டு நிதி ஆண்டிற்கான தங்களது நிதிநிலை அறிக்கையில் கல்வி கல்விக்காக அதிக அளவு விகிதத்தை ஒதுக்கியுள்ளனர்
- சத்தீஸ்கர் மாநிலத்தில் மதிப்பிடப்பட்ட நிகர நிதிநிலை செலவினத்தில் 18 .82 சதவீதத்தை கல்விக்காக அம்மாநிலம் ஒதுக்கி உள்ள நிலையில் பீகார் மாநில அரசாங்கம் 18.3% ஒதுக்கி உள்ளது
- சத்தீஸ்கர் மாநிலத்தின் கல்வி அறிவு விகிதம் 77.9 சதவீதமாக உள்ளது அதே சமயம் பீகார் மாநிலத்தின் கல்வி அறிவு விகிதமானது நாட்டிலேயே மிகக் குறைவான அளவு கல்வி அறிவு விகிதமாக 70 . 9 சதவீதமாக உள்ளது
தேசிய குடற்புழு நீக்க தினம் பிப்ரவரி 10
- ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10ஆம் தேதி அன்று தேசிய குடற்புழு நீக்க தினம் அனுசரிக்கப்படுகிறது
- இது நாடு முழுவதும் உள்ள ஒன்று முதல் 19 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்கம் செய்வதற்கு இந்திய அரசு மேற்கொண்ட ஒரு முன்னேற்பாடாகும்
- புழுக்கள் என்பது அவை தனக்கென உணவு மற்றும் அவை உயிர் வாழ்வதற்கான மனித குடலில் வாழ்கின்ற ஒட்டுன்னிகள்ஆகும்
- இந்தப் புழுக்கள் மனித உடலுக்கு தேவையான சில ஊட்டச்சத்துக்களை உட்கொண்டு ரத்த இழப்பு ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் வளர்ச்சி தடுப்பு ஆகிய குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன