MATHS HANDWRITTEN MATERIAL AVAILABE 400 pages only 149/-
gpay available contact : 8124821689
மணிப்பூர் தலைமை நீதிபதியாகும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி
■சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை, வட கிழக்கு மாநிலமான மணிப்பூரின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க, உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.■உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான, 'கொலீஜியம்' எனப்படும் நீதிபதிகள் தேர்வுக் குழுவின் கூட்டம் நடந்தது. இதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை, மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க, ஜனாதிபதிக்கும், மத்திய அரசுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
■மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சித்தார்த் மிருதுல், வரும் 21ல் ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியாக, டி.கிருஷ்ணகுமார் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
■கடந்த 2016 ஏப்., 7ம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட டி.கிருஷ்ணகுமார், 2025 மே 21ல் ஓய்வு பெற உள்ளார். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர்.
தமிழக அரசின் கோரிக்கைகளை கவனத்தில் கொள்வோம்: அரவிந்த் பனகாரியா உறுதி
■ ''தமிழக அரசின் கோரிக்கைகளை கவனத்தில் வைத்து, மாநிலங்களுக்கான நிதி பகிர்வு தொடர்பாக, 16வது நிதிக்குழு முடிவெடுக்கும்,'' என, அதன் தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்தார்.■ சென்னையில் நடந்த நிதிக்குழு உடனான ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு பரிந்துரைகளை, முதல்வர் ஸ்டாலின் முன்வைத்தார்.
■ தமிழகத்திற்கு ஏன் அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பதற்கு, விரிவான விளக்கத்தை தமிழக அரசு அளித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு அளித்த காட்சி விளக்கம் மிகச் சிறப்பாக இருந்தது.
■ தற்போது மத்திய அரசின் வரி வருவாயில், மாநிலங்களுக்கு 41 சதவீதம் வழங்கப்படுகிறது. இதை, 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் பல மாநிலங்களும், இதே கோரிக்கையை முன்வைத்துள்ளன.
■ இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது, அவற்றை எதிர்கொள்ள உரிய நிதியை, மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. பேரிடரை எதிர்கொள்ள அதிகம் செலவிடும் மாநிலங்களுக்கு, வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி வழங்குவது தொடர்பாக மாற்று வழிகளை நிதிக்குழு ஆராயும்.
■வளர்ச்சியை எதிர்நோக்கும் மாநிலங்களுக்கும், வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்குமான நிதி பகிர்வு இடைவெளி, 3:1 லிருந்து 6:1 ஆக அதிகரித்து உள்ளது.
இந்தியாவின் ஜிசாட் 20 செயற்கைக்கோள்; விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ்!
■ இஸ்ரோ தயாரித்த 4,700 கிலோ எடை கொண்ட ஜிசாட் 20 செயற்கைக்கோளை, அமெரிக்காவின் ப்ளோரிடாவில் இருந்து எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.■இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தகவல் தொடர்பை மேம்படுத்துவதற்காக, ஜிசாட் 20 செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் எடை 4,700 கிலோ. இதனை இஸ்ரோவுக்கு சொந்தமான ராக்கெட்டுகளால் விண்ணில் செலுத்துவது கடினமானது. இதனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உதவியை இஸ்ரோ நாடியது. அதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒத்துகொண்டது.
■இந்நிலையில், இன்று (நவ.,19) அமெரிக்காவின் ப்ளோரிடாவில், கேப் கேனரவல் ஏவுதளத்தில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட், மூலம் ஜிசாட் 20 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
■ இதில் உள்ள தகவல் தொடர்பு பேலோட் 14 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது.
■செயற்கைக்கோள் செயல்பாட்டிற்கு வந்ததும் தொலைதூரப் பகுதிகளுக்கான இணைய இணைப்பை வழங்கும்.
■இந்த செயற்கைக்கோளில் 32 பீம்கள் இணைக்கப்பட்டுள்ளது.
■இதன் மூலம் இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் அதிவேக இணைய சேவையை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை புதிய அமைச்சரவை பதவியேற்பு
■இலங்கையில் அதிபர் அனுரா குமார திசநாயகே தலைமையில், 21 பேர் அடங்கிய அமைச்சரவை நேற்று பதவியேற்றது. இதில், பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பிரதமராக ஹரிணி அமரசூரியா பதவியேற்றுள்ளார்.■நம் அண்டை நாடான இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றார்.
அபார வெற்றி ■பார்லி.,யில், தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு நான்கு எம்.பி.,க்கள் மட்டுமே இருந்ததால், பார்லி.,யை கலைத்து உத்தரவிட்ட அவர், நவ., 14ல் தேர்தல் நடக்கும் என அறிவித்தார்.
■இதன்படி, கடந்த 14ல் நடந்த பார்லி., தேர்தலில், மொத்தமுள்ள 225 தொகுதிகளில், 159ஐ கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி கட்சி அபார வெற்றி பெற்றது.
■இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் புதிய அரசில், 21 பேர் அடங்கிய அமைச்சரவையை நியமித்து, அதிபர் அனுரா குமார திசநாயகே உத்தரவிட்டார்.
2 தமிழர்கள் ■தலைநகர் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில், அதிபர் அனுரா குமார திசநாயகே தலைமையில் அமைச்சரவை பதவியேற்பு விழா நேற்று நடந்தது. அப்போது, இரு பெண்கள் உட்பட 21 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில், 12 பேர் புதுமுகங்கள்.
■இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரியா பதவியேற்றார். இவருக்கு உயர் கல்வி, தொழிற்கல்வித் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
■அந்நாட்டின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையை ஹரிணி அமரசூரியா பெற்றுள்ளார்.
■விஜித ஹேரத் - வெளியுறவு; சரோஜா சாவித்ரி பால்ராஜ் - பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரம்; கே.டி.லால்காந்த - விவசாயம், நீர்ப்பாசன அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
■ராமலிங்கம் சந்திரசேகர் - மீன் வளம்; பிமல் ரத்நாயக்க - விமானப் போக்குவரத்து; நலிந்த ஜயதிஸ்ஸ - சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
■அதிபர் திசநாயகே தலைமையிலான புதிய அமைச்சரவையில், தமிழர்கள் சரோஜா சாவித்ரி பால்ராஜ், ராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பசி மற்றும் வறுமை ஒழிப்பு குறித்து 'ஜி - 20' மாநாட்டில் மோடி பேச்சு
■பிரேசிலில் நடக்கும் 'ஜி - 20' உச்சி மாநாட்டில், 'சமூக உள்ளடக்கம், பசி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டம்' என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார்.■பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாடுகளுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலாவதாக, மேற்காசிய நாடான நைஜீரியாவுக்கு நேற்று முன்தினம் சென்றடைந்தார்.
■அங்கு, அந்நாட்டு அதிபர் போலா அகமது டினுபுவை சந்தித்து பேசினார். அங்கிருந்து புறப்பட்ட மோடி, தென் அமெரிக்க நாடான பிரேசிலுக்கு நேற்று சென்றடைந்தார்.
■பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நேற்று நடந்த, 'ஜி - 20' உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்றார்.
பாராட்டு ■மாநாட்டின் துவக்க அமர்வில், 'சமூக உள்ளடக்கம், பசி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டம்' என்ற தலைப்பில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: ஜி - 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் பிரேசில் அதிபர் லுாயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு பாராட்டுகள்.
■இந்த மாநாடு, நிலையான வளர்ச்சி என்ற இலக்கை மையமாக வைத்திருப்பது பாராட்டுக்குரியது. இந்த அணுகுமுறை, உலகளாவிய தெற்கின் பிரச்னைகளை எடுத்துக் காட்டுகிறது.
■ கடந்த ஆண்டு டில்லியில் நடந்த ஜி - 20 மாநாட்டில் மக்களை மையமாக வைத்து, 'ஓர் பூமி; ஓர் குடும்பம்; ஓர் எதிர்காலம்' என்ற மையக்கருத்தை முன்னெடுத்து செல்கிறது.
■வறுமை மற்றும் பசியை போக்க இந்தியா பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில், 25 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
■நாட்டில் உள்ள 80 கோடி மக்களுக்கு இலவச உணவு பொருட்களை அளித்து வருகிறோம். 'அடிப்படைக்கு திரும்புவோம்; எதிர்காலத்தை நோக்கி நடைபோடுவோம்' என்ற எங்கள் அணுகுமுறை சிறந்த பலனை அளிக்கிறது.
தட்டுப்பாடு ■உலக அளவில் தற்போது நடக்கும் போர்களால், உலகளாவிய தெற்கில் உணவு, எரிபொருள், உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
■இந்த நேரத்தில், பசி மற்றும் வறுமைக்கு எதிரான உலகளாவிய கூட்டணியை நிறுவுவதற்கான பிரேசிலின் முயற்சி பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.
■இந்த மாநாட்டை முடித்துக் கொண்டு, தென் அமெரிக்க நாடான கயானா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் முகமது இர்பான் அலியை சந்திக்க உள்ளார்.
■இந்த மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், பிரதமர் மோடி பேச்சு நடத்தினார்.
No comments:
Post a Comment