Thursday, May 9, 2024

January month 1 to 5 current affairs Tamil

 

1st January 2024

1. பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் விருது யாது?

a. அண்ணா தலைமைத்துவ விருது

b. அறிஞர் அண்ணா நினைவு விருது

c. அறிஞர் அண்ணா விருது

d. பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விருது

விடை: அண்ணா தலைமைத்துவ விருது

குறிப்பு

· அறிஞர் அண்ணா நினைவு விருது மாவட்ட அளவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் மாணாக்கர்களுக்கு வழங்கும் விருது

· அறிஞர் அண்ணா விருது வீர தீர செயல் புரிபவர்களுக்காக வழங்கும் விருது

2. பாரத் ஜிபிடி-யை உருவாக்க ரிலையன்ஸ் நிறுவனம், ____________ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்க உள்ளது.

a. சென்னை ஐஐடி

b. கொல்கத்தா ஐஐடி

c. மும்பை ஐஐடி

d. டெல்லி ஐஐடி

விடை: மும்பை ஐஐடி

குறிப்பு

· பாரத் ஜிபிடியானது (BharatGPT) என்பது சாட் ஜிபிடி போன்ற ஒரு செயற்கை நுண்ணறிவு தளம் ஆகும்.

3. பின்வருபவர்களில் 16வது நிதிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

a. C.ரங்கராஜன்

b. Y.V.ரெட்டி

c. அரவிந்த் பனகாரியா

d. A.M. குஸ்ரோ

விடை: அரவிந்த் பனகாரியா

குறிப்பு

· நிதிக்குழுத் தலைவரானவர் குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார்.

· இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள்

· பிரிவு 280ன்படி நிதி ஆணையமானது அமைக்கப்படுகிறது.

4. கேண்டிடேட்ஸ் செஸ் (Candidates Chess) போட்டிக்கு தகுதி பெற்றுள்ள வீரர்

a. டி.குகேஷ்

b. தானியா சச்தேவ்

c. அகர்வால்

d. குல்கர்னி

விடை: டி.குகேஷ்

குறிப்பு

· ஆர்.பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, கோனெரு ஹம்பி, ஆர்.வைஷாலி ஆகியோருக்கு அடுத்தபடியாக கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதியடைந்த 5வது போட்டியாளர் ஆவார்.

5. மரம், மூங்கில் உள்ளிட்ட காடு சார்ந்த பொருள்களை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு செல்ல தொடங்கப்பட்டுள்ள திட்டம்

a. ஒரு நாடு ஒரு அட்டைத் திட்டம்

b. ஒரு நாடு ஒரு பயணத் திட்டம்

c. ஒரு நாடு ஒரு பாஸ் திட்டம்

d. ஒரு நாடு ஒரு குறிக்கோள் திட்டம்

விடை: ஒரு நாடு ஒரு பாஸ் திட்டம்

குறிப்பு

· இத்திட்டத்திற்கு நேஷனல் டிரான்சிஸ்ட் பாஸ் சிஸ்டம் (NTPS) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

6. இலங்கைக்கு குடிபெயர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்களின் நினைவுகளை கெளரவப்படுத்த சிறப்பு அஞ்சல்தலை எங்கு வெளியிடப்பட்டது.

a. தில்லி

b. இந்தூர்

c. புனே

d. ராஞ்சி

விடை: தில்லி

குறிப்பு

· இலங்கைக்கு குடிபெயர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்களின் 200 ஆண்டு கால நினைவுகளை கெளரவப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

7. இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் சுற்றுலா சேவை எங்கு தொடங்கப்பட்டது?

a. துவராகா

b. அயோத்தி

c. ஜெய்ப்பூர்

d. சென்னை

விடை: துவராகா

குறிப்பு

· துவராகா குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது.

8. அப்போஃபிஸ் சிறுகோள் பூமியை நெருங்கும் நாளாக கருதப்படும் நாள்

a. 12.04.2029

b. 11.04.2029

c. 13.04.2029

d. 14.04.2029

விடை: 13.04.2029

குறிப்பு

· அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையமானது அபோபிஸ் சிறுகோள் 32,000 கி.மீ தூர அளவில் பூமியை நெருங்க உள்ளதாக  தெரிவித்துள்ளது..

9. சைபர் ஸ்வச்தா கேந்திரா (Cyber Swachhta Kendra) என்னும் இணையதளமானது ________ பாதுகாப்பிற்காக தொடங்கபட்டுள்ளது

a. மக்கள்

b. விவசாயி

c. இணைய

விடை: இணைய

குறிப்பு

· எண்ம சாதனங்களின் இணைய பாதுகாப்பிற்காக சைபர் ஸ்வச்தா கேந்திரா மத்திய அரசு புதிய இணையதளத்தினை உருவாக்கியுள்ளது.

10. 2024ஆம் ஆண்டிற்கான புத்தாண்டை முதன் முதலில் கொண்டாடிய நாடு

a. ஜப்பான்

b. தைவான்

c. நியூசிலாந்து

d. மலேசியா

விடை: நியூசிலாந்து

11. 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள போட்டி

a. கேரம்

b. ஸ்குவாஷ்

c. செஸ்

d. தடைதாண்டும் போட்டி

விடை: ஸ்குவாஷ்

 

12. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்க தினம் (DRDO Day) அனுசரிக்கப்படும் தினம்

a. ஜனவரி 01

b. டிசம்பர் 28

c. டிசம்பர் 30

d. ஜனவரி 02

விடை: ஜனவரி 01

குறிப்பு

· DRDO (Defence Research and Development Organisation) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது 1958-ல் புதுதில்லியை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்டது.

· இதன் தலைவராக S.V.வெங்கட் செயல்படுகிறார்.

 

 

 

13. உலகாளவிய குடும்ப தினம் (Global Family Day) அனுசரிக்கப்படும் தினம்

a. ஜனவரி 03

b. டிசம்பர் 29

c. டிசம்பர் 31

d. ஜனவரி 01

விடை: ஜனவரி 01

 

2nd January 2024

1. அண்மையில் (01.01.2024) வெளியிடப்பட்ட வைரமுத்துவின் நூல் எது?

a. மகா கவிதை

b. வைகறை மேகங்கள்

c. திருத்தி எழுதிய தீர்ப்புகள்

d. இன்னொரு தேசியகீதம்

விடை: மகா கவிதை

குறிப்பு

· 2003 – சாகித்திய அகாதமி (கள்ளிக்காட்டு இதிகாசம்)

· 2003 – பத்ம ஸ்ரீ விருது

· 2014 – பத்மபூசன் விருது

2. பாரதிதாசன் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?

a. வேலூர்

b. சென்னை

c. திருச்சி

d. மதுரை

விடை: திருச்சி

குறிப்பு

பல்கலைக்கழகம்

இடம்

தொடங்கிய ஆண்டுகள்

அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை

1978

தமிழ்நாடு பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்

1981

திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

வேலூர்

2002

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்

சென்னை

2002

காமராஜர் பல்கலைக்கழகம்

மதுரை

1966

பெரியார் பல்கலைக்கழகம்

சேலம்

1997

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

திருச்சி

1982

பாரதியார் பல்கலைக்கழகம்

கோயம்புத்தூர்

1982

அன்னைதெரசா மகளிர் பல்கலைக்கழகம்

திண்டுக்கல்

1984

 

3. இந்தியாவிற்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியின் பெயர்

a. மித்ர சக்தி (Mitra Shakti)

b. பாலைவன சூறாவளி (Desert Cyclone)

c. வின்பேக் (VINBAX)

d. சூர்யகிரண் (Surya Kiran)

விடை: பாலைவன சூறாவளி (Desert Cyclone)

குறிப்பு

· மித்ர சக்தி இந்தியா மற்றும் இலங்கை இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சி

· வின்பேக் இந்தியா மற்றும் வியட்நாம் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சி

· சூர்யகிரண் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சி

4. கடந்த ஆண்டில் (2023) தமிழகத்தில் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை

a. 97,609

b. 96,790

c. 96,709

d. 97,690

விடை: 96,709

5. கடந்த 10 ஆண்டுகால அரசின் சாதனைகளை குறித்து நமோ செயலி மூலம் கருத்து தெரிவிப்பதற்கு வழங்கப்பட்ட பெயர் என்ன?

a. நமோ மன் சர்வே

b. சர்வே ஆப் ஜன்

c. சர்வே ஆப் நமோ

d. ஜன் மன் சர்வே

விடை: ஜன் மன் சர்வே

6. பெண்களுக்கான எதிரான குற்ற புகாரில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம்

a. தில்லி

b. மகாராஷ்டிரம்

c. தமிழ்நாடு

d. உத்திரபிரதேசம்

விடை: உத்திரபிரதேசம்

குறிப்பு

· 2023-ல் பெண்களுக்கான எதிரான குற்ற புகார் 28,811-ஆக பதிவு ஆகியுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் (NCW) தெரிவித்துள்ளது.

· தேசிய மகளிர் ஆணையம் – 1992

· தமிழகத்தில் 608 புகார்கள் பதிவாகியுள்ளன.

· முதலிடம் உத்திரபிரதேசம் (16,109)

· இரண்டாமிடம் தில்லி (2,411)

· மூன்றாமிடம் மகாராஷ்டிரம் (1,343)

7.  வானியல் ஆய்வுக்காக விண்ணில் செலுத்தப்பட்ட எக்ஸ்போசாட் செயற்கைகோள் எந்த ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது?

a. பிஎஸ்எல்வி சி-54 / PSLV C-54

b. பிஎஸ்எல்வி சி-55 / PSLV C-55

c. பிஎஸ்எல்வி சி-58 / PSLV C-58

d. பிஎஸ்எல்வி சி-59 / PSLV C-59

விடை: பிஎஸ்எல்வி சி-58 / PSLV C-58

குறிப்பு

· PSLV – Polar Satellite Launch Vehicle

· எக்ஸ்போசாட் செயற்கைகோள் கருந்துளை, நியூட்ரான் விண்மீன்கள் தொடர்பான வானியல் ஆய்வுக்காக விண்ணில் செலுத்தப்பட்டது.

· 

8. தேர்தல் நிதிப்பத்திரங்களின் 30வது கட்ட விற்பனை தொடங்கிய நாள்

a. ஜனவரி 01

b. ஜனவரி 02

c. ஜனவரி 03

d. ஜனவரி 04

விடை: ஜனவரி 02

குறிப்பு

· தேர்தல் நிதிபத்திரங்கள் – 2018

· தேர்தல் நிதிபத்திரங்கள் விநியோகம் செய்யும் வங்கி  – எஸ்பிஐ வங்கி

· அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளின் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய தேர்தல் நிதிபத்திரங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

· தேர்தல் நிதிபத்திரங்கள் விநியோகம் செய்ய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே வங்கி எஸ்பிஐ வங்கி

· மக்களவை அல்லது பேரவை தேர்தல்களில் 1%மேல் வாக்குகளை பெற்ற கட்சிகள் மட்டுமே இப்பத்திரங்களை பெற முடியும்

9. 2023 டிசம்பரில் தமிழகத்திற்கு கிடைத்துள்ள ஜிஎஸ்டி வருவாய் எவ்வளவு

a. ரூ.9.888 கோடி

b. ரூ.8.888 கோடி

c. ரூ.9.898 கோடி

d. ரூ.9.889 கோடி

விடை: ரூ.9.888 கோடி

குறிப்பு

· 2023 டிசம்பரில் ரூ.1.64 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்துள்ளதென மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

· மத்திய நிதியமைச்சகம் – 29.10.1946

10. 2023-ல் பயங்கரவாதங்களின் மையமாக அறிவிக்கப்பட்டுள்ள  நகரம்

a. கைபர் பக்துன்கவா

b. இஸ்லாமாபாத்

c. கராச்சி

d. லாகூர்

விடை: கைபர் பக்துன்கவா

குறிப்பு

· பாகிஸ்தானில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2023-ல் பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், 1,524 பேர் இறந்துள்ளதாகவும் பாகிஸ்தான் ஆய்வறிக்கை அறிவித்துள்ளது.

11. சிறந்த மாற்றுத்திறனாளி வில்வித்தை வீராங்கனை விருதினை பெற்றவர்

a. ஷீத்தல் தேவி

b. தீபிகா குமாரி

c. சிம்ரன்ஜீத் கவுர்

d. வைஷாலி

விடை: ஷீத்தல் தேவி

12. ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த டேவிட் வார்னர் எந்த நாட்டினைச் சேர்ந்தவர்?

a. மேற்கு இந்திய தீவுகள்

b. இங்கிலாந்து

c. ஆஸ்திரேலியா

d. தென் ஆப்பிரிக்கா

விடை: ஆஸ்திரேலியா

13. உலக உள்முக சிந்தனை தினமானது (World Introvert Day) அனுசரிக்கப்பட்ட தினம்

a. டிசம்பர் 31

b. ஜனவரி 02

c. டிசம்பர் 30

d. ஜனவரி 01

விடை: ஜனவரி 02

 

3rd January 2024

1. 47வது சென்னை புத்தக கண்காட்சியானது நடைபெறும் இடம்

a. திருநெல்வேலி

b. கோயம்புத்தூர்

c. திருவள்ளூர்

d. சென்னை

விடை: சென்னை

2. இந்தியாவில் பாலிடெக்னிக் & பிஎச்.டி மாணவர்கள் சேர்க்கையில் தமிழ்நாடு _______ இடம் வகிக்கிறது.

a. 2

b. 1

c. 4

d. 3

விடை: 1

3. இந்தியாவின் தலை சிறந்த 100 கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழகத்தில் இடம் பெற்றுள்ள கல்லூரிகளின் எண்ணிக்கை

a. 22

b. 15

c. 35

d. 16

விடை: 35

குறிப்பு

· தலை சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் தமிழகத்தில் 22 பல்கலைக்கழகங்கள் அமைந்து உள்ளன.

· தலை சிறந்த 100 பொறியியல் கல்லூரிகளில் தமிழகத்தில் 15 பொறியியல் கல்லூரிகள் அமைந்து உள்ளன.

4. மருத்துவ தொழில் நுட்ப கண்டுபிடிப்பாளர்களை கண்டுபிடிக்கவும் சுகாதார நலத்தீர்வுகளை மேம்படுத்தவும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்கமானது உருவாக்கியுள்ள செயலியின் பெயர் என்ன?

a. மெட்டெக் மித்ரா / Med Tech Mitra

b. நமோ நாம் / Namo Namo

c. ஆரோக்கிய சேது / Arogya Setu

d. டிஜி லாக்கர் / Digi Locker

விடை: மெட்டெக் மித்ரா / Med Tech Mitra

5. 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான தேசிய தரவரிசைப் பட்டியிலில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம்

a. கர்நாடகம்

b. தெலுங்கானா

c. தமிழ்நாடு

d. கேரளம்

விடை: தமிழ்நாடு

6. 2023ஆம் ஆண்டுகளுக்கான எம்.எஸ்.சுவாமிநாதன் விருதினை பெற்றவர்

a. சஞ்சீவ் கண்ணா

b. பி.ஆர்.கம்போஜ்

c. ரவீந்திரகுமார் தியாகி

d. ரவீந்திரகுமார் சுவாமி

விடை: பி.ஆர்.கம்போஜ்

குறிப்பு

· செளத்ரி சரண்சிங் ஹரியானா வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பி.ஆர்.கம்போஜ் செயல்படுகிறார்.

7. இந்தியாவின் பெட்ரோலிய தலைநகரமாக மாறியுள்ள மாநிலம்

a. குஜராத்

b. உத்திரபிரதேசம்

c. மேற்கு வங்கம்

d. அசாம்

விடை: குஜராத்

8. இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு நகரம் எது?

a. டெல்லி

b. ஹைதரபாத்

c. கொச்சி

d. லக்னோ

விடை: லக்னோ

குறிப்பு

· லக்னோ நகரமானது உத்திரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது

9. இந்திய பெருங்கடல் கடற்படை கருத்தரங்கத்தின் 8வது தலைவர்கள் கூட்டம் நடைபெற்ற இடம்

a. தாய்லாந்து

b. பாகிஸ்தான்

c. இந்தியா

d. வங்கதேசம்

விடை: தாய்லாந்து

10. ரூ.1,112 கோடி செலவில் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் கட்டப்பட்ட புதிய முனையத்தை திறந்து வைத்தவர்.

a. அமித்ஷா

b. ராஜ்நாத் சிங்

c. நரேந்திர மோடி

d. நிர்மலா சீதாராமன்

விடை: நரேந்திர மோடி

11. தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாக தலைவராக நியமிக்கப்பட்டவர்.

a. சஞ்சீவ் கண்ணா

b. பி.ஆர்.கம்போஜ்

c. ரவீந்திரகுமார் தியாகி

d. ரவீந்திரகுமார் சுவாமி

விடை: சஞ்சீவ் கண்ணா

12. இந்தியாவின் முதல் அனைத்து பெண்கள் சைனிக் பள்ளி தொடங்கப்பட்டுள்ள இடம்

a. ராஜஸ்தான்

b. உத்திரப்பிரதேசம்

c. மத்திய பிரதேசம்

d. பீகார்

விடை: உத்திரப்பிரதேசம்

குறிப்பு

· சைனிக் பள்ளி என்பது இராணுவம், கடற்படையில் சேர்வதற்கான பயிற்சி அளிக்கும் பள்ளியாகும்

· 1961-ல் பாதுகாப்புத்துறை அமைச்சராக பணியாற்றிய கிருஷ்ணன் மேனன் எனபவர் சைனிக் பள்ளி என்ற  யோசனையை கொண்டு வந்தார்.

13. பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் ஹிட் அண்ட் ரன் (Hit and Run) வழக்கிற்கு வழங்கப்பட்ட தண்டணை காலம் எவ்வளவு

a. 5 ஆண்டுகள்

b. 3 ஆண்டுகள்

c. 10 ஆண்டுகள்

d. 6 ஆண்டுகள்

விடை: 10 ஆண்டுகள்

குறிப்பு

· IPC-1860 (Indian Penal Code-1860)-யின் படி 2 ஆண்டுகள் சிறை தண்டணை வழங்கப்பட்டு வந்தது. தற்போது 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

14. 2023-ல் சர்வதேச அளவில் சரியான நேரத்தில் இயக்கப்படும் முதல் 10 விமான நிலையங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள விமான நிலையம்

a. சென்னை சர்வதேச விமான நிலையம்

b. மினியாபொலிஸ் செயின்ட் பால் சர்வதேச விமான நிலையம்

c. ஹைதராபாத் விமான நிலையம்

d. பெங்களூர் விமான நிலையம்

விடை: மினியாபொலிஸ் செயின்ட் பால் சர்வதேச விமான நிலையம்

குறிப்பு

· 2வது இடம் ஹைதராபாத் விமான நிலையம் (தெலுங்கானா)

· 3வது இடம் பெங்களூர் விமான நிலையம் (கர்நாடகம்)

15. பவர் கிரிட் நிறுவனத்தின்  (Power Grid Corporation) தலைவராக நியமிக்கப்பட்டவர்

a. சஞ்சீவ் கண்ணா

b. பி.ஆர்.கம்போஜ்

c. ரவீந்திரகுமார் தியாகி

d. ரவீந்திரகுமார் சுவாமி

விடை: ரவீந்திரகுமார் தியாகி

16. பெலிக்ஸ் சிசெகெடி (Felix Tshisekedi) என்பவர் எந்நாட்டின் அதிபராக தேர்வாகியுள்ளார்?

a. போலந்து

b. எகிப்து

c. ஐக்கிய அரபு அமீரகம்

d. காங்கா ஜனநாயகக் குடியரசு

விடை: காங்காே ஜனநாயகக் குடியரசு

 

 

4th January 2024

1. 47வது சென்னைப் புத்தகக் காட்சியின் போது கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெற்றவர்களுள் பொருந்தாதவர்

a. .சிவசுப்பிரமணியன்

b. உமா மகேஸ்வரி

c. தமிழ்மகன்

d. பாலசுப்பிரமணியன்

விடை: பாலசுப்பிரமணியன்

2. மின்சார வாரிய ஊழியர்களின் பாதுகாப்பிற்காக தமிழக அரசு உருவாக்கிய செயலியின் பெயர் என்ன?

a. TNEB Safety

b. Manarkeni App

c. e-learning

d. TNEB Workers

விடை: TNEB Safety

3. சமீபத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியில் சேர்க்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள மாவட்டம்

a. தூத்துக்குடி

b. மயிலாடுதுறை

c. பட்டு்கோட்டை

d. கோயம்புத்தூர்

விடை: மயிலாடுதுறை

குறிப்பு

· தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

· மயிலாடுதுறையில் தற்போது வேளாண் சார்ந்த திட்டங்கள் மட்டுமே செயல்படுத்த முடியும்.

4. இரத்த புற்றுநோய்க்கு வாய் வழி செலுத்த இந்தியாவில் கண்டறிய மருந்து எது?

a. பரிவால்

b. ஆஸ்பிரின்

c. அட்ரோபின்

d. கொல்கிசின்

விடை: பரிவால்

குறிப்பு

· டாடா மெமோரியல் மருத்துவமனையானது பரிவால் (PREVALL) மருந்தினை கண்டறிந்துள்ளது.

· உலகின் முதல் உமிழ் நீர் கர்ப்ப பரிசோதனை கருவி [சாலிஸ்டிக் (Salistick)] இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

5. K-Smart செயலியை அறிமுகம் செய்துள்ள மாநிலம் எது?

a. தமிழ்நாடு

b. கர்நாடகம்

c. மகாராஷ்டிரா

d. கேரளா

விடை: கேரளா

குறிப்பு

· பிறப்பு, இறப்பு போன்ற சில சான்றிதழ்களை K-Smart செயலி மூலம் பெற முடியம்.

6. மாநில காவல் துறை  தலைவர்கள் (டிஜிபி), ஐஜிக்கள் மாநாடு நடைபெற்றுள்ள இடம் எது?

a. கொல்கத்தா

b. கொச்சி

c. ஜெய்ப்பூர்

d. லக்னோ

விடை: ஜெய்ப்பூர்

7. பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தினை செயல்படுத்திய முதல் யூனியன் பிரதேசம்

a. புதுச்சேரி

b. ஜம்மு & காஷ்மீர்

c. அந்தமான்

d. தாத்ரா & ஹவேலி

விடை: ஜம்மு & காஷ்மீர்

குறிப்பு

· விஸ்வகர்மா திட்டமானது 2023 செப்டம்பர் 17-ல் தொடங்கப்பட்டது.

8. தற்போது வரை தமிழ்நாட்டில்  _________ சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

a. 68.5

b. 78.5

c. 77.5

d. 67.5

விடை: 78.5

குறிப்பு

· இந்தியாவின் கிராமப்புற பகுதியில் 5.33 கோடி வீடுகளில் குடிநீர் இணைப்பு இல்லையெனவும் 2023 டிசம்பர் நிலவரப்படி 72.29% கிராமங்களில் குடிநீர் இணைப்பானது வழங்கப்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

· 100% குடிநீர் இணைப்பு புதுச்சேரி, தெலுங்கானா, குஜராத், கோவா, அந்தமான் நிக்கோபர், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ, ஹரியானா, பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம்

· குடிநீர் இணைப்பு பெறுவதில் பின் தங்கியவை மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட்

8. எந்த நகரங்களுக்கு இடையே கடலுக்கு அடியிலான கண்ணாடி இழை கேபிள் இணைப்பு திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்துள்ளார்.

a. திருவனந்தபுரம் மற்றும் இலட்சத்தீவு

b. கொச்சி மற்றும் இலட்சத்தீவு

c. கொச்சி மற்றும் அந்தமான்

d. திருவனந்தபுரம் மற்றும் அந்தமான்

விடை: கொச்சி இலட்சத்தீவு

குறிப்பு

· மேலும் கட்மாட் பகுதியில் நிறுவப்பட்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தையும் துவங்கி வைத்துள்ளார்.

9. ஒலியினால் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய ட்ரோனான லூசியினை கண்டறிந்த நாடு எது?

a. ஜப்பான்

b. நார்வே

c. ஜெர்மெனி

d. இங்கிலாந்து

விடை: ஜெர்மெனி

குறிப்பு

· LUCY (லூசி) – Listening System Using a Crow’s nest arraY

10. 2024ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறவுள்ள நாடு

a. பிரேசில்

b. ரஷ்யா

c. சீனா

d. இந்தியா

விடை: ரஷ்யா

குறிப்பு

· இம்மாநாட்டின்போது பிரிக்ஸ் கூட்டமைப்பில் புதிதாக எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியோ, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற 5 நாடுகள் இணைகின்றனன

· 2006-ல் பிரிக் (BRIC) கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் இருந்தன. பின் 2010-ல் தென்னாப்பிரிக்கா உறுப்பு நாடாக இணைந்து பிரிக்ஸ் (BRICS) என்ற பெயர் வந்தது.

11. BAPS இந்து கோவில் எங்கு கட்டப்பட்டுள்ளது?

a. அபுதாபி

b. எகிப்து

c. எத்தியோப்பியா

d. ஐக்கிய அரபு அமீரகம்

விடை: அபுதாபி

12. ஆண் குணத்தை பாதியும், பெண் குணத்தை பாதியும் பெற்ற பறவையின் பெயர் என்ன?

a. அன்னப்பறவை

b. செங்காட்டான் பறவை

c. கடற்கூடா பறவை

d. பச்சை ஹனி கிரிப்பர் பறவை

விடை: பச்சை ஹனி கிரிப்பர் பறவை

13.  ஐரோப்பிய மூதலீட்டு வங்கியின் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்?

a. நதியா கால்வினோ

b. உமா லௌவாலி

c. எலினோர் ஆஸ்ட்ரோம்

d. டானிகா பேட்ரிக்

விடை: நதியா கால்வினோ

14. உலக பிரெய்லி தினமானது அனுசரிக்கப்படும் நாள்?

a. டிசம்பர் 31

b. ஜனவரி 01

c. ஜனவரி 04

d. ஜனவரி 02

விடை: ஜனவரி 04

15. உலக ஹிப்னாடிசம் தினமானது அனுசரிக்கப்படும் நாள்?

a. ஜனவரி 03

b. ஜனவரி 01

c. ஜனவரி 04

d. ஜனவரி 02

விடை: ஜனவரி 04

 


No comments:

Post a Comment